திருமாவின் ட்விட்டர் பக்கத்தில் ஆட்சியில் பங்கு கேட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. பங்கு என்றால் தொகுதி ஒதுக்கீட்டில் பங்கு கிடையாது, ஆட்சி அதிகாரத்தில், பங்கு வேண்டும் என அவர் பேசுவது போன்ற வீடியோ பகிரப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சிறுது நேரம் கழித்து நீக்கப்பட்டது. மீண்டும் அதே வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு, நீக்கப்பட்டது. திருமாவளவனிடம் இதுகுறித்து கேட்ட போது, அட்மின் போட்டு இருப்பார் என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.