
புத்தாண்டு தினத்தில் 809 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி உலக மக்கள் தொகை 809 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 1 ஆம் பிறக்கும் போது நாட்டு மக்கள் தொகை 8,092,034,511 ஆக இருக்கும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை 7.1 கோடி அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி 141 கோடி மக்களுடன் இந்தியா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றது. சீனா இரண்டாவது இடத்தில உள்ளது.