சிவகங்கை: சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

56பார்த்தது
சிவகங்கை: சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய சுற்றுலாப் பயணிகள் வந்த டெம்போ டிராவலர் வாகனமும், காரும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கோர விபத்தில் காரில் இருந்த இரு சிறுமிகள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், டெம்போ டிராவலரில் இருந்த 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி