12 வயது சிறுவனை நிர்வாணப்படுத்தி தாக்கியவர்கள் கைது

77பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் வயர்களை திருடியதாக குற்றம்சாட்டி 12 வயதான பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.