தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

63பார்த்தது
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தொடர்ந்து அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 14) 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவுள்ளது.

தொடர்புடைய செய்தி