
பெரம்பலூர்: சிறந்த இளைஞர் செஞ்சிலுவை சங்கத்திற்கான விருது வழங்கும் விழா
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்பட்டு வரும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கங்களில் சிறந்த இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கான விருது இன்று வழங்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மாணவர்கள் மத்தியில் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சிறந்த இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமாக எழுமூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தேர்வு செய்யப்பட்டு திருமிகு ஜெயா ஆசிரியை அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் முன்னிலையில் விருது வழங்கி கௌரவித்தார்கள். அப்பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஜூனியர் விருதும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட JRC ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.