முதல்வர் மருந்தகம் அமைக்க பிப். 05ஆம் தேதி வரை www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத் தொகையாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும்.