

பெரம்பலூர் நூற்றாண்டு நினைவு தூணை திறந்து வைத்த அமைச்சர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஆதனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் மாவட்டஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நூற்றாண்டு சுடரொளி ஏற்றி வைத்து, நூற்றாண்டு நினைவுத்தூணை இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, போக்குவரத்துதுறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில், கல்வி எங்களின் அடிப்படைஉரிமை என்ற தலைப்பிலான நூற்றாண்டு உறுதி மொழிமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டது. இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க கல்வி அய்யாசாமி, வட்டார கல்வி அலுவலர்கள் சின்னசாமி, விஜயா, பள்ளி மேலாண்மை குழுதலைவர் திருமதி. சரண்யா, பள்ளி தலைமை ஆசிரியர் லோகமதி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்.