திமுக கொடி பொருந்திய கார், பெண்களை துரத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து அச்சுறுத்தும் வகையில், தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதறவைக்கிறது. பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா?” என விமர்சித்துள்ளார்.