தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களின் 2ஆவது பட்டியல் இன்று (ஜன.29) வெளியாக உள்ளது. முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட சில தவெக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2ஆம் கட்ட மாவட்ட செயலாளர்களுடனான நேர்காணலுக்காக பனையூர் அலுவலகத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தடைந்தார்.