மனிதர்கள் திடீரென அழிந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை யோசித்து இருக்கிறீர்களா? மனிதர்கள் அழிந்து விட்டால் அவர்கள் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளும் உணவில்லாமல் அழிந்து விடும். பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அணு உலைகள் வெடித்து மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படும். மின்சாரம் இல்லாமல் உலகமே இருளாகிவிடும். தப்பித்த விலங்குகள் தன் வாழ்வாதாரத்தை தேடி ஓடும். சில மில்லியன் வருடங்களில் இயற்கை மீண்டும் தனது இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.