திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகளின் மூலம் புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீரானது ராஜ வீதிகள் வழியாக உலா வந்து திருக்கோவிலின் யாக மண்டபத்தை அடைந்தது. இந்த நிகழ்வில் தருமபுர ஆதீனம், தம்பிரான் சுவாமிகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.