சென்னை: யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற பிப்.6ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்கிட வேண்டும் எனவும் அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.