

அரசு மீது குற்றச்சாட்டு சொல்லக்கூடாது... கண்டித்த பேரவைத் தலைவர்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (டிச. 09) நடைபெற்ற நிலையில் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசும் போது, "இயற்கை பேரிடரின் போது என் தொகுதி கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியும் உதவி கிடைக்கவில்லை" என்றார். இதன்போது குறுக்கிட்ட பேரவை தலைவர் அப்பாவு, “எத செய்யலனு சொல்லுங்க, பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க.. மூத்த உறுப்பினர் என்பதால் இந்த நேரத்தில் அரசு மீது குற்றச்சாட்டுலாம் சொல்லக்கூடாது" என்றார்.