திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டி பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த கழுதை பால் விற்பனை செய்யும் நபர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தினசரி காலை நேரங்களில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சங்கு கழுதை பால் ரூ.100-க்கும் ஒரு லிட்டர் கழுதை பால் ரூ.8,000 வரையிலும் விற்பனை செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு ஒரு கழுதை அரை லிட்டர் பால் கறப்பதாக தெரிவித்துள்ளனர்.