
“மாநிலஅரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்”
மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று தேவைப்படும். அதனை வைத்து தான் பள்ளி தொடங்க அனுமதி வழங்கப்படும். ஆனால், தற்போது சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் திருத்தம் செய்துள்ளது.