சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 3வது போட்டி இன்று கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கல்டன் 103 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.