பீகார்: போஜ்பூர் மாவட்டம் அரா-மொஹனியா 4 வழிச் சாலையில், லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாகும்பமேளவிற்கு சென்று பாட்னாவிற்கு திரும்பிய கார் சாலையின் ஓரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், சஞ்சய் குமார், கருணா தேவி, லால் பாபு சிங், பிரியம் குமாரி, ஆசா குமாரி, ஜூஹி ராணி ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.