கிராமங்களில் சிலர் தேங்காயை வைத்து நிலத்தடி நீரோட்டம் இருப்பதை கண்டறிவதாக கூறுகின்றனர். இது குறித்த வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும். தேங்காயை வைத்து நிலத்தடி நீரோட்டத்தை கண்டறிய முடியாது. தேங்காய் எழுந்து நிற்பதை ஓட்டம் பார்ப்பவர்கள் கைகளாலேயே செய்கின்றனர். ஆனால் மக்கள் இதை நம்புகின்றனர். அறிவியல் பூர்வமாக இது சாத்தியமில்லாத ஒன்றாகும்.