விஜய் முதலமைச்சராக வேண்டி மொட்டை போட்ட தவெகவினர்

73பார்த்தது
விஜய் முதலமைச்சராக வேண்டி மொட்டை போட்ட தவெகவினர்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வருகிற 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. மக்களின் ஆதரவைப் பெற பல்வேறு முயற்சிகளை கட்சி நிர்வாகிகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டி மதுரை அழகர் கோயில் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். மேலும், கிடா வெட்டி வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி