மயிலாடுதுறை: சுகாதார இணை இயக்குனர் ஆய்வு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்து நேற்று (நவம்பர் 12) சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது. இதன் காரணமாக சிகிச்சை அளித்த டாக்டர் ரம்யா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணி புறக்கணிப்பு செய்து வருகின்றனர். தொடர்ந்து சுகாதாரத் துறை இணை இயக்குனர் பானுமதி அரசு மருத்துவமனையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.