நாகை: மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் குத்தாலம் அருகே சேத்திர பாலபுரம் கீழத்தெருவில் உள்ள வீட்டில் நடைபெறும் கட்டிட பணிக்காக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சிமெண்ட் கலவை சுமந்து செல்லும் போது வெளிச்சத்திற்காக போடப்பட்டிருந்த டியூப் லைட்டுக்கான மின்சார வயரை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.