சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த பாலாஜி சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவர் பாலாஜியிடம், உடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக விசாரித்தார். முன்னதாக மருத்துவமனைக்குச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவர் பாலாஜியை நலம் விசாரித்தார்.