மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி மற்றும் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து விடாமல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் தரங்கம்பாடி மற்றும் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பைபர் படகு மீனவர்கள் பலர் தொடர் மழை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தங்கள் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.