மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், ஆயர்பாடி, சங்கரன் பந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தரங்கம்பாடி தாலுகா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.