மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர் வாரும் பணி நடைபெற்றது.
பழைய காவிரி மற்றும் அறுபத்து மூவர் பேட்டை மற்றும் நகரின் பல பகுதிகளில் வாய்க்கால்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கனமழை பெய்தால் மழை நீர் தேங்காாமல் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.