பூம்புகார் - Poombhukar

மயிலாடுதுறை: தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த நவ. 2-ஆம் தேதி பிறந்த குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது. இதுதொடர்பாக மகப்பேறு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் மரத்துரா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி முருகேசன்.  இவர், தனது மனைவி சிவரஞ்சனியை நவ. 2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதித்தார். அவருக்கு கடந்த நவ. 6-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை அசைவின்றி இருந்ததால், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு குழந்தை திங்கள்கிழமை காலை உயிரிழந்தது.  உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதப்படுத்தியதே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் முருகேசனின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்