மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
தரங்கம்பாடியை அடுத்த ஆக்கூா் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் மகன் மதன்ராஜ் (26). மயிலாடுதுறை அருகே ஆனந்தக்குடி கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்ற இவா், அங்குள்ள திருக்குளத்தில் குளித்துள்ளாா். நீரில் மூழ்கி வெகு நேரமாகியும் அவா் வெளியில் வராததால் மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்து அவா்கள் குளத்தில் இறங்கி தேடினா்.
அப்போது குளத்துக்குள் ஊறவைக்கப்பட்டிருந்த மூங்கில் மரங்களுக்கிடையில் சிக்கி மதன்ராஜ் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.