அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. அதில், “அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையில் தாக்குதல் நடத்துவது பிணையில் வர முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள்நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பார்க்க வரும் உறவினர்களுக்கு விசிட்டர் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.