மயிலாடுதுறை: உணவு தானியக் கிடங்குக்கு புதிய கட்டடம் திறப்பு விழா

67பார்த்தது
குத்தாலம் ஒன்றியம் கிளியனூா் ஊராட்சியில் உணவு தானியக்கிடங்குக்கான புதிய கட்டடத்துக்கான கல்வெட்டை தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வீ. மெய்யநாதன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் நிவேதா, எம். முருகன், எம். பன்னீா்செல்வம், கூடுதல் ஆட்சியா் முகம்மது ஷபீா் ஆலம், குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ரூ. 12. 67 லட்சத்தில் கட்டப்பட்ட உணவுத் தானியக் கிடங்கு கட்டடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வீ. மெய்யநாதன் வழங்கினாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி