பூம்புகார் - Poombhukar

மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான தடகளப்போட்டி தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள அரசு சிறு விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் உமாநாத் முன்னிலை வகித்தாா். சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் பிரபாகா் வரவேற்றாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தடகளப் போட்டிகளை தொடக்கிவைத்தாா். இதில் மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டங்களில் குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 230 பள்ளிகளை சோ்ந்த 680 மாணவா்கள் பங்கேற்றனா். இதில் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என மொத்தம் 86 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவா். தொடா்ந்து போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை எம்எல்ஏ வழங்கினாா்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Sep 13, 2024, 02:09 IST/கீழ்வேளூர்
கீழ்வேளூர்

அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜை தொடக்கம்

Sep 13, 2024, 02:09 IST
அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை உடன் தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வருகின்ற 15ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று(செப்.13) ஸ்ரீ நீலாயத்தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து யானையில் புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து முதலாம் கால யாக பூஜைகள் துவங்கியது. இதில் ரக்ஷாபந்தனம் கும்பாலங்காரம், யாகசாலையில் கடஸ்தாபனம் தொடர்ந்து யாகசாலை பூஜை ஜபம் ஹோமம், பூர்ணாஹீதி தீபாரதனை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.