மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சாா்பில் விவசாயிகளிடம் இருந்து ரூ. 15 லட்சத்துக்கு புதன்கிழமை நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
செம்பனாா்கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குறுவை அறுவடை பணி பெரும்பாலும் முடிவடைந்து நிலையில் அறுவடை நெல்லை ஒரு மாதத்துக்கும் மேலாக விவசாயிகளின் நலன்கருதி செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சாா்பில் விவசாயிகளின் இருப்பிடத்துக்கே சென்று மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
அந்த வகையில், நாகை விற்பனைக் குழுச் செயலாளா் வித்யா மாத்தூா் விவசாயிகளின் இருப்பிடத்துக்கு சென்று நெல் கொள்முதல் செய்தாா். இதில் கோ-51 ரக நெல் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 2,300-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 2,050-க்கும் சராசரியாக ரூ. 2,100-க்கும் விற்பனையானது. அதன்படி புதன்கிழமை மட்டும் 700 குவிண்டால் நெல் ரூ. 15 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது.