கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது

77பார்த்தது
அக்கரைப்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை உடன் துவங்கியது மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வருகின்ற 15ஆம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டு இன்று ஸ்ரீ நீலாயத்தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து யானையில் புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டது அதனை தொடர்ந்து முதலாம் கால யாக பூஜைகள் துவங்கியது இதில் ரக்ஷாபந்தனம் கும்பாலங்காரம், யாகசாலையில் கடஸ்தாபனம் தொடர்ந்து யாகசாலை பூஜை ஜபம் ஹோமம், பூர்ணாஹீதி தீபாரதனை உள்ளிட்டவை நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :