மதுரை நகரம் - Madurai City

சாலைகளை குளிர்விக்கும் மாநகராட்சி

சாலைகளை குளிர்விக்கும் மாநகராட்சி

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மதுரை, சென்னை, சேலம், திருச்சி, வேலூர் உட்பட பல்வேறு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. மதுரை மாநகரில் கடந்த 2 மாதமாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில வாரமாக, பகல் நேரத்தில் மதுரை மாநகர் சாலைகள் தொடர்ச்சியாக 100 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலையை எட்டுகிறது. அதனால், மாநகராட்சி நிர்வாகம், கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க தினமும் பகல் வேளையில் முக்கிய சாலைகளில் லாரி தண்ணீரை ஊற்றி வருகிறது. ஏற்கெனவே, வார்டுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத குடியிருப்புகளில் லாரிகள் மூலம் குடிநீரை வழங்குகின்றனர். தற்போது குடிநீர் விநியோகம் தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் தண்ணீரை ஊற்று வதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் புழுதி பறக்காமல் சிறிது நேரத்துக்கு வெப்பம் குறைந்து வாகனப் போக்குவரத்துக்கு சுலபமாக உள்ளது. இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது: சாலைகளை குளிர்விக்க மட்டுமில்லாமல் தூசி பறக்காமல் இருக்கவும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. சாலைகளில் குவிந்துள்ள மண்ணை உறிஞ்சும் வாகனம் மூலம் அப்புறப்படுத்துகிறோம். பகலில் அனல் காற்று வீசும் போது தூசி பறந்து வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துகிறது. அதனால் கடந்த 2 மாதமாகவே முக்கியச் சாலைகளில் லாரி மூலம் தண்ணீரை ஊற்றுகிறோம் என்றார்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా