மதுரை: தொடர் பனிபொழிவால் பூக்களின் விலை அதிகரிப்பு

77பார்த்தது
மதுரை மாவட்டத்தில் தை, மார்கழி மாதங்களில் தொடர்ந்து பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது. இதனால் மதுரை மல்லிகைப் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4500 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் மல்லிகைப் பூவின் விலை 3,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து வரவுள்ள முகூர்த்த தினத்தை முன்னிட்டும் இந்த பூக்களின் விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் பூ வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ. 3,500, மெட்ராஸ் மல்லி ரூ. 1,500, பிச்சி ரூ. 1800, முல்லை ரூ. 1800, செவ்வந்தி ரூ. 150, சம்பங்கி ரூ. 200, செண்டு மல்லி ரூ. 80, கனகாம்பரம் ரூ. 2,000, ரோஸ் ரூ. 250, பட்டன் ரோஸ் ரூ. 300, பன்னீர் ரோஸ் ரூ. 350, கோழிக்கொண்டை ரூ. 80, அரளி ரூ. 200, தாமரை (ஒன்றுக்கு) ரூ. 25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த நாட்கள் முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலையில் கணிசமான உயர்வு உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப்பூ உள்ளிட்ட சில பூக்களின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி