தூத்துக்குடியில் ஸ்பிக் உர தயாரிப்பு நிறுவனத்துக்காக 1971-ல் 421 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. முல்லைக்காடு, கோரம்பள்ளம் ஆகிய கிராமப் பகுதிகளில் 421 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. 810 ஏக்கர் தனியாரிடம் இருந்தும் வாங்கப்பட்டன; அங்கு உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டது.
மேலும் பல ஏக்கர் நிலங்களை உர நிறுவனத்துக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். 1981-ம் ஆண்டில் 30.40 ஏக்கர் நிலத்தை தனியார் கெமிக்கல் நிறுவனத்துக்கு ஸ்பிக் உர நிறுவனம் வழங்கியது.
ஸ்பிக் நிறுவனத்தால் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட 663 ஏக்கரை விவசாய பயன்பாட்டிலிருந்து விலக்களித்து 2002-ல் அரசாணை வெளியிடப்பட்டது. நிலங்களை ஆலைக்கு பயன்படுத்துவதில் விலக்கு அளிக்க மறுத்தும், அதை மீண்டும் அரசுக்கு மாற்றியும் 2007-ல் உத்தரவிடப்பட்டது.
நிலத்தை மீண்டும் அரசுக்கு மாற்றி திருநெல்வேலி நில நிர்வாக ஆணையர் 2007-ம் ஆண்டில் உத்தரவிட்டார். அதற்கு எதிராக ஸ்பிக் உர நிறுவனம், கெமிக்கல் நிறுவனம் தனித்தனியாக வேளாண் நில தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுக்கள் 2014-ல் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிலங்களை சட்ட அனுமதியின்றி மனுதாரர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்; அதை அரசு உடனே மீட்க வேண்டும் என்றார்.