மதுரை: தெப்பத் திருவிழாவையொட்டி போக்கு வரத்து மாற்றம்

73பார்த்தது
மதுரை: தெப்பத் திருவிழாவையொட்டி போக்கு வரத்து மாற்றம்
மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று ஒருநாள் மதுரை மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து மதுரை மாநகர காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, விரகனூர் ரிங்ரோடு செல்லக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் சுகுணா ஸ்டோர் சந்திப்பு வழியாக அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம் வழியாக வைகை தென்கரை சாலை சென்று விரகனூர் ரிங் ரோடு செல்லலாம். 

ஆவின் மற்றும் குருவிக்காரன் சாலை வழியாக விரகனூர் மற்றும் விரகனூர் ரிங்ரோடு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்பு சென்று வைகை தென்கரை சாலை வழியாக ரிங்ரோடு செல்ல வேண்டும். பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து முனிச்சாலைரோடு, விரகனூர் சாலை வழியாக விரகனூர் ரிங்ரோடு செல்லக்கூடிய பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கணேஷ் தியேட்டர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்பு சென்று தென்கரை சாலை வழியாக ரிங்ரோடு செல்ல வேண்டும். முனிச்சாலைரோடு, தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி செல்லக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் முனிச்சாலை சந்திப்பு புதிய ராமநாதபுரம் ரோடு வழியாக கேட்லாக் ரோடு சென்று அனுப்பானடி செல்ல வேண்டும்.

தொடர்புடைய செய்தி