இளைஞர் தற்கொலை சம்பவம்; அரசு மருத்துவமனையில் பரபரப்பு
மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆட்டோ தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ்சுக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்துள்ளார் கடந்த 10 நாட்களாக ஆட்டோ சவாரிக்கு வெளியூர் சென்றிருந்தபோது பைக்காரா பகுதியில் பிரகாஷ் குறித்து தவறாக கருத்துகளை பொதுமக்களிடம் பரப்பியதால் ஊருக்குள் வருவதற்கு அவமானமாக இருப்பதாக கூறி பிரகாஷ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள மெக்கானிக் ஷெட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் தற்கொலை செய்வதற்கு முன்பாக இது போன்று என்னை பற்றி தவறான கருத்துக்களை பேசி வந்த ராஜா என்பவர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அரசு இராஜாஜி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று உடலில் பெட்ரோல் ஊற்றி சாலை மறியலில் உட்கார்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு உடலை வாங்கி சென்றனர்.