மதுரை கோச்சடையில் அமைந்துள்ள குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் "குயின் மீரா பேட்மிட்டன் அகாடமி"திறக்கப்பட்டது. இதனை இந்தியாவின் பேட்மிட்டன் தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் திறந்து வைத்து பின்னர் தமிழ்நாடு அளவிலான சப் ஜூனியர் பேட்மிட்டன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகள் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புல்லேலா கோபிசந்த் கூறுகையில்,
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். குறிப்பாக மோடி தலைமையிலான அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதேபோல் தமிழ்நாடு அரசிலும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வீரர்களை தயார் செய்கிறது தமிழகத்தில் 17 வயது கோவையைச் சேர்ந்த சிறுமி பேட்மிட்டனில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
பேட்மிட்டன் விளையாட்டு ஒரு காஸ்லி கேம்தான், இதனால் கிராமப்புறங்களில் இருந்து இந்த விளையாட்டுக்கு வருவது சற்று கடினமானது தான்.
அதற்காகத்தான் தற்பொழுது இரண்டாம் கட்ட நகரங்களான மதுரை, மிசோரம் உள்ளிட்ட பகுதிகளில் பேட்மிட்டன் விளையாட்டுக்கான அகாடமி துவங்கி அதில் சிறந்த வீரர்களும் உருவாகி வருகிறார்கள்.
விளையாட்டு உடலையும் உள்ளத்தையும் ஒருங்கிணைக்கும் வித்தை, எனவே அனைவரும் விளையாட்டுக்கும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களும் ஒத்துழைப்பு தருகின்றனர்", என்றார்.