கர்நாடகா: மைசூரில் இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் சாதிய ரீதியதாக சர்ச்சைக்குறிய வகையில் பதிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உதயகிரி காவல் நிலையத்திற்குட்பட்ட பேரங்காடியைச் சேர்ந்த இளைஞர்கள், மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரை இழிவுபடுத்திய வீடியோவை பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, உதயகிரி போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இதனை கண்டித்து காவல் நிலையம் மீது கற்களை வீசி தாக்கினர்.