மதுரை: அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. திமுக சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 900 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றிபெறும் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.