மதுரை: கிருஷ்ணர் வேடமணிந்து வந்த சிக்கந்தரின் மகன்

58பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மக்கள் ஒற்றுமையாக சமூக நல்லிணக்கத்துடன் இருந்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக மதுரை திகழ்கிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது மதுரையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினரின் செயல். மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினரான சிக்கந்தர்பாட்ஷா - அமிரா தம்பதியினரின் 2 வயது மகனான அஸ்லான் கானுக்கு கடவுள் கிருஷ்ணரின் வேடமணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அஸ்லான் கானுக்கு கிருஷ்ணர் வேடமணிந்தனர்.

பின்னர் அஸ்லான் கானின் தாயார் அமிரா புர்கா அணிந்தவாறு கிருஷ்ணர் வேடமிட்டபடி வந்த தனது குழந்தையை கையைப் பிடித்தவாறு வீதியில் நடந்துவந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு இது தான் மதுரை மண் சமூக நல்லிணக்கத்துடன் அனைத்து மதத்தினரும் வாழ்கின்றனர் என கூறியபடி சிறுவன் அஸ்லானை தூக்கிக் கொஞ்சினர்.

தொடர்புடைய செய்தி