மதுரை: மரக்கன்றுகளை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

67பார்த்தது
மதுரை மாநகர் கோரிப்பாளையம் அருகே உள்ள வைகை ஆற்றின் கரையோரம் மதுரை மாநகராட்சி சார்பாக வைக்கப்பட்ட மரக்கன்றுகள் முழுவதும் சேதமடைந்துள்ளது. அங்குள்ள மரக்கன்றுகளை பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த வேலிகளும் சேதம் அடைந்தும் காணப்பட்டு வருகிறது. இதனை முறையாக மதுரை மாநகராட்சி பராமரித்து மீண்டும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் வேலிகளை முறையாக அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி