இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேட்டி

84பார்த்தது
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணியின் சார்பில் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் 5000க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள், இந்து முன்னணி, பாஜக, ஆர். எஸ். எஸ் என பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலிருந்து அறப்போராட்டத்தில் பங்கேற்க கிளம்பிய இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் போலீசாரால் கைது செய்யப்பட்டு தாமதமாக விடுவிக்கப்பட்டார்.

இதனால் இரவு 8 மணிக்கு மேல் மதுரை வந்தடைந்த அவருக்கு இந்து முன்னணி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்ரமணியன் பேசும் பொழுது


" இந்து முன்னணியின் சார்பில் பல்வேறு சமூக தலைவர்கள் முருக பக்தர்கள் என அனைவருக்கும் திருப்பரங்குன்றம் முருகன மலையை காப்பதற்காக அறப்போராட்டத்தில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பெரிய எழுச்சியோடு இந்த அறப்போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. முருகன் மலையை காப்பாற்ற வேண்டும் அதற்கான முதல் கட்ட போராட்டமாக இது நடைபெற்று இருக்கிறது. தொடர்ச்சியாக திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் இதற்கு அழுத்தம் கொடுப்போம். அறப்போராட்டத்தில் மக்கள் முருகன் மலையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தன்னெழுச்சியாக கூடியிருக்கிறார்கள் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி