மதுரை: இது தமிழ்நாடா அல்லது கருணாநிதி நாடா - ஆர். பி உதயகுமார் கேள்வி

51பார்த்தது
மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திருமங்கலம் ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஆலம்பட்டி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆர். பி. உதயகுமார் மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் சேர்ந்து மனு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட செக்காணூரணி பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் இன்று பூமிபூஜை போடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கோரிக்கைகளுக்காக 4 ஆண்டுகள் மனுவை தூக்கிக் கொண்டு செல்வது தான் மிச்சம். 

ஆனால் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. கருணாநிதிக்கு சிலை வைக்கும் முதல்வர் ஸ்டாலின் தேவருக்கு சிலை வைக்க சட்டத்தில் இடம் இல்லை என கூறுகிறார். தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி சிலைகள் அமைக்கப்படுகின்றன மேலும் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களில் கட்டுமானங்களில் கருணாநிதியின் பெயரே இடம்பெறுகிறது. இது தமிழ்நாடா அல்லது கருணாநிதி நாடா என்று வெளி மாநிலத்தவர் கேட்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. தற்போது நடைபெற்று வரும் மன்னர் ஆட்சியை அகற்றி மக்களாட்சியை வருகின்ற தேர்தலில் அதிமுக அமைக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி