முருகப்பெருமானை போற்றுவோம் என்று தவெக தலைவர் விஜய் தைப்பூசத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், 'தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப்
போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்' என குறிப்பிட்டுள்ளார்.