ஓசூர் - Hosur

அளவுக்கு அதிகமாக மது குடித்த வியாபாரி உயிரிழப்பு

அளவுக்கு அதிகமாக மது குடித்த வியாபாரி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் பேடரப்பள்ளியை சேர்ந்தவர் தன்பால் (41) இவர் மருந்து கடை வைத்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மன ஊளைச்சலில் இருந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசூர் பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதிக்கு தனபால் சென்றார். அங்கு அவர் 2 நாட்களாக, அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்துள்ளார். நேற்று(செப்.11) அவரது அறையின் கதவு வெகு நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால், ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது. அங்கு தனபால் உயிரிழந்து கிடந்தார். இதையெடுத்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழா
Sep 12, 2024, 17:09 IST/ஊத்தங்கரை
ஊத்தங்கரை

அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழா

Sep 12, 2024, 17:09 IST
கிருஷ்ணகிரியில் நாளை(செப்.13) அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்க விழா. மாவட்ட கழக செயலாளர் தே. மதியழகன்., MLA, அழைப்பு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கனி அதிகமாக விளைவதால் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி கண்காட்சி ஒரு மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பதாவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை 13-09-2024 வெள்ளிக்கிழமை மதியம் 03-00 மணிக்கு கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில் துவக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார்கள். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தெரிவித்திருந்தார்.