
கிருஷ்ணகிரி: அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சேலம் மண்டல பாலதண்டாயுதம் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சேலம் மண்டல துணை தலைவர் சபரீசன் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் சென்னீரன் ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு நல வாரியம் மற்றும் காப்பீடு குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர். இதில் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.