ஆடிப்பூரத்தையொட்டி கஞ்சி வார்ப்பு விழா: பக்தர்கள் வழிபாடு

63பார்த்தது
ஒசூர் ஓம் சக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஓம் சக்தி அம்மனுக்கு 40 வது ஆண்டு கஞ்சி வார்ப்பு விழா இன்று நடைபெற்றது.

இதனையொட்டி கோயிலில் ஓம் சக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பெண்கள் வேப்பிலையோடு கஞ்சி கலயங்களை எடுத்து தலை மேல் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான பெண்கள் பூ கரகங்களை தலைமேல் சுமந்து பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடினர்.

இந்த ஊர்வலம் கோயிலில் இருந்து ஓசூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த கஞ்சி வார்ப்பு விழா ஊர்வலத்தில் பல்லக்கில் ஓம் சக்தி அம்மன் வீதி உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி