மத்திய பட்டு வாரிய பவள விழாவையொட்டி நடந்த கண்காட்சி

53பார்த்தது
ஓசூரில் டிவிஎஸ் நகரில் உள்ள மத்திய பட்டு இன வள மையத்தில் மத்திய பட்டு வாரிய பவள விழாவையொட்டி பட்டு தொகுப்பு விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

மத்திய பட்டு இன வள மைய இயக்குனர் நிஷிதா நாயக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு துறை, பட்டு முத்திரை நிறுவனம், ஈரி பட்டுப்புழு வளர்ப்பு மையம் மற்றும் நெசவாளர்களின் பட்டு கைவினை பொருட்கள், கைத்தறி பொருட்கள், சேலைகள், மல்பெரி பட்டுப்புழு, அதன் வாழ்க்கை சுழற்சி, மண் முதல் பட்டு வரை பல்வேறு விதமான பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மேலும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பொருட்கள் விற்பனையும் செய்யப்பட்டன.

இந்த கண்காட்சியில் ஓசூர், தளி, சேலம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து மத்திய பட்டு இன வள மைய விஞ்ஞானி புனிதவதி விளக்கமளித்தார்.

தொடர்புடைய செய்தி